மார்லன் சாமுவேல்ஸ் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான மார்லன் சாமுவேல்ஸ், அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

39 வயதான சாமுவேல்ஸ், கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெறுவது பற்றி தன்னிடம் கூறியதாக கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் அமைப்பின் தலைமை அதிகாரி ஜானி கிரேவ் அறிவித்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட மார்லன் சாமுவேல்ஸ், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் இறுதியாக பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. 2012ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு நடந்த ரி-20 உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய அவர் இரண்டு இறுதிப்போட்டியிலும் அதிக ஓட்டங்கள் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.

மார்லன் சாமுவேல்ஸ், ஐ.பி.எல், பிக் பேஷ் மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் மற்றும் கரீபியன் பிரிமியர் லீக் ஆகிய தொடர்களில் விளையாடியுள்ளார்.

சாமுவேல்ஸ் 71 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7 சதம், 24 அரைச்சதத்துடன் 3,917 ஓட்டங்களும், 41 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்

207 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 சதம், 30 அரைசதத்துடன் 5,606 ஓட்டங்களும், 89 விக்கெட்டுகளும், 67 ரி-20 போட்டிகளில் விளையாடி 10 அரைச்சதம் உட்பட 1,611 ஓட்டங்களும், 22 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

Fri, 11/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை