கொழும்புக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ள ​கோரிக்கை

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் − இராணுவத் தளபதி

கொழும்பு நகருக்கு வருகை தருவதை முடிந்தளவு கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த காரணங்களுக்காக கொழும்புக்கு பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எவ்வாறாயினும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் களையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச்சட்டம் நேற்றுக்காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு ள்ள நிலையில் இராணுவத் தளபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் மாத்திரம் கொரானா வைரஸை கட்டுப்படுத்திவிட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இத்தகைய சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் அது தொடர்பில் பெரும் பொறுப்பு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மாகாணம் உள்ளிட்ட மேலும் பல பிரதேசங்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நேற்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் மேலும் 27 பிரதேசங்களுக்கான தனிமைப்படுத்தல் முடக்கம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை