தேரரின் இறுதிக்கிரியை; கண்டி - திகன வீதி மூடல்

தேரரின் இறுதிக்கிரியை; கண்டி - திகன வீதி மூடல்-Kandy-Digana Road Closed-Cheif Prelate of Ramanna Maha Nikaya Final Rituals

கண்டி -திகன பிரதான வீதி இன்று (22) நண்பகல் முதல் தற்காலிகமாக மூடப்படும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ராம்மாஞ்ஞ மஹா நிக்காய நாபான பேமசிறி தேரரின் இறுதி கிரியை நிகழ்வுகளை முன்னிட்டு, இன்றைய தினம் கண்டி- திகன பிரதான வீதியை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக்கியைகள் இன்று (23) பிற்பகல் 1.00 மணியளவில்  கண்டி, குண்டசாலை, வராபிட்டியவிலுள்ள பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில், அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

குறித்த விளையாட்டரங்கு, கண்டி - மஹியங்கணை பிரதான வீதியில் அமைந்துள்ளதால், இன்று (22) நண்பகல் 12.00 மணி முதல், குறித்த இறுதிக் கிரியைகள் நிறைவடையும் வரை மூடப்பட்டிருக்கும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய,

  • குண்டசாலை, நத்ரம்பொத 621 சந்தி மற்றும் திகன நகரிலிருந்து வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழி

  • மஹியங்கணை, ஹசலக்கவிலிருந்து கண்டி நோக்கி வரும் வாகனங்கள், திகண நகரில் வைத்து, மெணிக்ஹின்ன - பொல்கொல்ல வீதி ஊடாக, கண்டி நோக்கிப் பயணிக்க முடியும்.
  • கண்டியிலிருந்து ஹசலக்க, மஹியங்கணை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் குண்டசாலை, நத்ரம்பொத, 621 சந்தியில் வைத்து, யக்கஹபிட்டிய, கிரிமெட்டிய, மெணிக்ஹின்ன நகரத்தின் ஊடாக திகன நகரிற்கு சென்று மஹியங்கணை பிரதான வீதிக்குள் நுழைய முடியும்

பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படாதவாறு மாற்றுவழிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நிகழ்வுகள் முடிவடைந்ததும்  போக்குவரத்து நடைமுறை வழமைக்கு வந்துவிடும் என, கண்டிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்தார்.

 

(எம்.ஏ. அமீனுல்லா)

Sun, 11/22/2020 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை