சகா, ஹோல்டர் அபாரம்

5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்

சகா மற்றும் ஹோல்டரின் சிறப்பான ஆட்டத்தால் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர் அணி.

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் ​ேராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதற்கான நாணயச்சுழற்சியிவல் வென்ற ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர்.

படிக்கல் 5 ஓட்டங்களிலும், அணியின் தலைவர் கோலி 7 ஓட்டங்களிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 32 ஓட்டங்களிலும் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

121 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வோர்னர் 8 ஓட்டங்களிலும், சகா 39 ஓட்டங்களிலும், மணீஷ் பாண்டே 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

வில்லியம்சன் 8 ஓட்டங்களிலும் அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் 10 பந்தில் 26 ஓட்டங்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆட்ட நாயகன் விருது சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றி மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்து, பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை