கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலை அணுக அனுமதி

யெமனின் செங்கடற்கரைக்கு அப்பால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் எண்ணெய் கப்பலை அணுகுவதற்கு ஐ.நா கண்காணிப்பாளர்களுக்கு யெமன் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

ஒரு மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய்யை நிரப்பி இருக்கும் இந்தக் கப்பம் உடைந்தால் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் யெமன் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது தொடக்கம் இந்த எண்ணெய்க் கப்பல் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

இதன் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் தெரிவித்துள்ளார்.

45 ஆண்டுகளாக இயங்கும் இந்த எண்ணெய்க் கப்பல் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு ஹுதைதா துறைமுகத்தில் இருந்து வடக்காக 60 விலோமீற்றர் தூரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவூதி அரேபிய ஆதரவுடன் யெமன் அரசுக்கு இடையிலான போரில் 100,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

Thu, 11/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை