மலையகத்தைப் போல் மட்டக்களப்பில் பனிமூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று அதிகாலை தொடக்கம் பனிமூட்டம் காணப்பட்டது.
இந்தப் பனிமூட்டம் வழமைக்கு மாற்றமாக மலையகத்தைப் போன்று படர்ந்திருந்ததைக் காண முடிந்தது.
சூரியன் உதயமாகி கதிர்கள் பரப்பியிருந்தபோதும் பனிமூட்டம் காரணமாக இருள் கவ்வி இருந்ததால் வாகனங்களுக்கு முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டே பயணிக்க வேண்டியிருந்தது.
இந்தப் பனி மூட்டம் நேற்று (27) காலை 8 மணிவரை படர்ந்திருந்து மெல்ல மெல்ல அகன்றது.
பெரியபோரதீவு தினகரன் நிருபர்
Sat, 11/28/2020 - 13:12
from tkn
Post a Comment