வெளிநாடுகளிலுள்ள இலங்கையரது நிலங்களை அபகரிக்கும் கும்பல்

உடனடி விசாரணைக்கு சட்டமா அதிபர் பணிப்பு

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை நடத்த சட்டமா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அரசியல் ரீதியாக செல்வாக்குமிக்க ஒரு குழுவால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் கண்காணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்காணிகள் போலி பத்திரம் தயாரித்து விற்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில் அம்பாந்தோட்டை நகர மேயர் உட்பட நான்கு பேர் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், குறித்த விவகாரத்தை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக என சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை