சவுக்கடித் தண்டனையால் மயங்கி விழுந்த இளைஞன்

இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் பிள்ளையைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்குத் தண்டனையாகச் சவுக்கடிகள் பெற்றுள்ளார்.

அச்சே மாநிலத்தில் இஸ்லாமியச் சட்டத்தை மீறுவோருக்குப் பொதுஇடத்தில் வைத்துச் சவுக்கடி கொடுப்பது வழக்கம்.

அந்த இளைஞர் புரிந்த கொடுங்குற்றத்திற்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி முதுகில் 146 சவுக்கடிகள் நிர்ணயிக்கப்பட்டது.

சவுக்கடிகளை வாங்கிக்கொண்டிருந்தபோது இளைஞர் வலியில் துடிதுடித்து அலறினார். தண்டனையை நிறுத்தும்படிக் கெஞ்சினார். மருத்துவர்கள் அவருக்குச் சற்றுநேரம் சிகிச்சை அளித்தபின்னர் சவுக்கடி மீண்டும் தொடர்ந்தது. முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு முனையில் இருக்கும் அச்சே பிராந்தியத்தில் மாத்திரமே இஸ்லாமிய சட்டம் அமுலில் உள்ளது. இந்தப் பிராந்தியம் நீண்டகால பிரிவினைவாத போராட்டத்தின் பின்னரே மத்திய அரசிடம் இருந்து சுயாட்சி அதிகாரங்களை பெற்றது.

அத்தகைய கடுமையான தண்டனையைப் பார்க்கும் மக்கள் தவறு செய்யத் தயங்குவர் என கிழக்கு அச்சேயின் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

ஆனால் மனித உரிமை இயக்கங்கள் கடுமையான தண்டனைகளை எதிர்க்கின்றன.  

Sat, 11/28/2020 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை