இந்துமத விழுமியங்களை எடுத்தியம்பும் உன்னத பண்டிகை

நீதியமைச்சர் அலிசப்ரி தீபாவளி வாழ்த்து

இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மத நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

தீபாவளியானது இரக்கம், தன்னலமற்ற தன்மையுடைய, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகிய இந்து மத விழுமியங்களை கொண்டாடும் நாள் ஆகும் என நீதியமைச்சர் அலிசப்ரி தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி ‘தீபத் திருநாள்’ என்று அழைக்கப்படுகிறது. இது இருளின் மீது ஒளியின் ஆன்மீக வெற்றியையும், தீமையின் மீதான நல்லது மற்றும் அறியாமை மீதான அறிவு என்பவற்றைக் குறிக்கிறது. இது ஒரு நிலையான செய்தி ஆகும். ஆயினும்கூட, உலகம் அதன் இருளின் மணித்தியாலங்களை அனுபவிக்கும் ஒரு நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒளியை நோக்கி வருவதற்கான நம்பிக்கையையும் , ஒளியானது இருளை வெல்லும் என்பதையும் இச்செய்தி உணர்த்துகிறது .

இலங்கையானது வேறெங்கும் இல்லாத ஒரு தனித்துவமான நாடாகும். இங்கு தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், வெவ்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் கலாசார பாரம்பரியங்களைக் கொண்டு ஓருயிராக ஒன்றிணைந்து மக்கள் வாழ்கின்றனர்.

உங்கள் அனைவருக்கும் சமாதானமானதும் மகிழ்ச்சியானதுமான தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

 

 

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை