உலக டென்னிஸ் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள

கிகி பெர்டென்ஸுக்கு அறுவைச் சிகிச்சை

இந்த மாத தொடக்கத்தில் ரோலண்ட் கரோஸில் நான்காவது சுற்றில் இடம் பிடித்த பெர்டன் அவுஸ்திரேலிய பகிரங்க உட்பட அடுத்த பருவகாலத்தில் தொடக்கத்தில் இடம்பெறும் போட்டித் தொடரை இழப்பார்.

முதல் 10 இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர் கிகி பெர்டென்ஸ் தனது இடது அகில்லெஸ் தசைநார் மீது அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவுஸ்திரேலிய பகிரங்கம் உட்பட அடுத்த பருவகால தொடக்கத்தை இழப்பார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த 28 வயதான இவர் இன்ஸ்டாகிராமில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டார், மருத்துவமனை படுக்கையில் தன்னைப் பற்றிய ஒரு படத்தை காலில் கட்டுடன் வைத்து பதிவிட்டுள்ளார்.

பெர்டென்ஸ் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "தனது குதிகால் காயம்" சில காலமாக கஷ்டப்பட்டு வருவதாகவும், "மீண்டும் வலி இல்லாமல் விளையாடுவதற்கான" ஒரே வழி அறுவை சிகிச்சை.என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை