அமைச்சர் டக்ளஸுக்கு இன்று 63 வயது

இந்துமத பீடம் ஆசி தெரிவிப்பு

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கடற் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று (10.11.2020) தனது 63 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு சர்வதேச இந்துமத பீடம் சார்பாக சிவஸ்ரீ கலாநிதி இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய வாழ்த்தில் தெரிவித்துள்ளதாவது;

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய செய்து கொள்ளப்பட்ட இலங்கை, - இந்திய ஒப்பந்தத்தின்படி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னோக்கி நகர்த்துவதில் தொடர்ந்தும் தமது கருத்தை வலியுறுத்தி வருவதுடன், வெறுமனே அரசியல் தீர்வு மட்டும் பேசாமல் அன்றாடம் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதிலும் உறுதியாக செயற்பட்டு வரும் அவருக்கு இறைவன் ஆசீர்வதிப்பதோடு அவருக்கு எல்லா வளங்களும் கிடைக்க வேண்டுமெனவும்அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை