மொசம்பிக் நாட்டில் 50 பேர் தலை துண்டித்துக் கொலை

வடக்கு மொசம்பிக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளால் 50க்கும் அதிகமானோர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆயுததாரிகள் கிராமம் ஒன்றின் மைதானத்தை படுகொலைத் தளமாக மாற்றியதோடு கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிதைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு கிராமத்திலும் பலர் சிரச்சேதம் செய்யப்பட்டிருப்பதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 2017 தொடக்கம் எரிவாயு வளம் கொண்ட காபோ டெல்காடோ மாகாணத்தில் ஆயுததாரிகள் நடத்தும் கொடிய தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனது.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த மாகாணத்தில் இடம்பெற்று வரும் மோதல்களில் 2,000 பேர் வரை கொல்லப்பட்டு 430,000 பேர் வரை தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் தொடர்புபட்ட ஆயுதக்குழுக்கள் இங்கு காலூன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி வறுமை மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை ஆயுதக் குழுவினர் தம்முடன் இணைத்துக் கொள்கின்றனர்.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை