இலங்கை சிறையிலிருந்த 43 பாகிஸ்தான் போதைப்பொருள் குற்றவாளிகள் நாடுகடத்தல்

சிறப்பு விமானம் மூலம் நேற்று இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக இலங்கையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 43 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதிகள் சிறப்பு விமானம் மூலம் பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மேல் நீதிமன்றின் உத்தரவின் பேரில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அழைத்துச் செல்லப்படும் இவர்கள் அந் நாட்டு நீதிமன்றின் உத்தரவின் கீழ் மீண்டும் பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் 86 பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நேற்றுக் காலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல பஸ்களில் இவர்கள் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கைதிகளின் வழக்கு கோப்புகளும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை