ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 30 படையினர் பலி

ஆப்கானிஸ்தான் மத்திய மாகாணமான காசியில் நேற்று இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 30 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலின் தீவிரம் மற்றும் அது இடம்பெற்ற பகுதி காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

‘30 உடல்கள் மற்றும் 24 காயமடைந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பு படையினராவர்’ என்று காஸ்னி மாகாண மருத்துவமனைப் பணிப்பாளர் பாஸ் முஹமது ஹமட் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் பாதுகாப்புப் படையின் அங்கமான மக்கள் பாதுகாப்பு படை வளாகத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்த வளாகத்தைச் சூழவிருக்கும் குடியிருப்புப் பகுதிகளும் சோதமடைந்துள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் சூழலில் கடந்த சில மாதங்களில் ஆப்கானில் கார் குண்டு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை