கொரோனா தொற்று காரணமாக வேறு சிறைகளிலிருந்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ள 30 கைதிகளால் உயிருக்கு ஆபத்தாம்

போகம்பர கைதிகள் 100 பேர் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டம்

கண்டி, போகம்பரயிலுள்ள பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், நேற்றுக் காலை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரியே அவர்கள் இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொவிட் -19 வைரஸ் காரணமாக கண்டி போகம்பர பழைய சிறைச்சாலைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ள   30 இற்கும் மேற்பட்ட கைதிகளினால் தற்பொழுது அங்கு தங்கியுள்ள ஏனைய கைதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, சுமார் 100 இற்கும் மேற்பட்ட கைதிகள் நேற்றுக் (12) காலை கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர் . பல்வேறு குற்றச்சாட்டுக்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சுமார் 800 பேர் சிறைச்சாலை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கண்டியிலுள்ள பழைய போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு கொவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள முப்பது கைதிகள் உள்ளனர் எனவும், தங்களில் பலருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ப்படவில்லை எனவும் அவ்வாறு தங்களின் பரிசோதனைகள் விரைவுபடுத்தப்படாவிட்டால், தங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து கண்டி பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்கவிடம் விசாரித்த பொழுது, தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்ட இந்தக் கைதிகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் உள்ளது எனவும், மேலும் தற்போதைய நிலைமைகளை சீர் செய்ய அவர்கள் அனைவருக்கும் PCR சோதனைகளை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

எம்.ஏ.அமீனுல்லா

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை