3ஆம் தவணைக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆரம்பம்

3ஆம் தவணைக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆரம்பம்-Schools Will Reopen for Gr 6-13-From November 13-GL Peiris

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல், 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆயினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த இடங்களிலேயே இவ்வாறு பாடசாலைகள் ஆரமபிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதற் கட்டமாக தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

Thu, 11/19/2020 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை