2,500 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு

எகிப்தில் 2,500 ஆண்டு பழமையான நூற்றுக்கும் அதிகமான சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மிகப் பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது.

யுனெஸ்கோ மரபுரிமைத் தலமான சக்காரா நெக்ரோபொலிஸ் புதைகாட்டுப் பகுதியில் அவை கண்டெடுக்கப்பட்டன. பண்டைய எகிப்தின் மாபெரும் புதைகாடாக சக்காரா இருந்துள்ளது.

அழகான வண்ணப் பூச்சுடன் கூடிய அந்த சவப்பெட்டிகள் அனைத்தும் முத்திரையிடப்பட்டும் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.

சமூகத்தில் உயர்நிலையில் இருந்தோரின் பதப்படுத்தப்பட்ட உடல்களை அவை தாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சவப்பெட்டிகள் கி.மு. 320 தொடக்கம் கி.மு. 30 வரையான சுமார் 300 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட டோலமிக் வம்சத்தைச் சேர்ந்தவை என்று எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சர் காலித் அல் அனானி தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதமும் அந்தப் புதைகாட்டிலிருந்து 59 சவப் பெட்டிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அங்கு மேலும் அரிய பொருட்கள் புதையுண்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை