ஊரடங்கு சட்டத்தை மீறிய 2,200 பேர் இதுவரை கைது

முகக் கவசம் அணியாவிடினும் நடவடிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை அலட்சியம் செய்கின்றவர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண நேற்று அவ்வாறு 75 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண;

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமாக முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் கண்டிப்பானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டவர்கள் 220 பேர் நேற்று முன்தினமும் நேற்றும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள மேல் மாகாணம் உள்ளிட்ட பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளில் கடந்த அக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்றுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 340 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். . (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை