அக்கரைப்ற்று சந்தையில் 22 பேரில் 10 பேருக்கு தொற்று

அக்கரைப்ற்று சந்தையில் 22 பேரில் 10 பேருக்கு தொற்று-10 Out of 22 Tested Positive for COVID19 in Akkaraipattu

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று மரக்கறி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 10 பேர் கொரோனோ தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால்  அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் (26) இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கிழக்கு மாகாண சுகாதரா பணிப்பாள் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அக்கரைப்ற்று சந்தையில் 22 பேரில் 10 பேருக்கு தொற்று-10 Out of 22 Tested Positive for COVID19 in Akkaraipattu

அக்கரைப்பற்று நகரிலுள்ள மரக்கறி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 22 பேருக்கு நேற்று (25) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட PCR பிரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை உடனடியாக கொரோனா தொற்றுக்காக  சிகிச்யைளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் அந்த சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரும்வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அக்கரைப்ற்று சந்தையில் 22 பேரில் 10 பேருக்கு தொற்று-10 Out of 22 Tested Positive for COVID19 in Akkaraipattu

தம்புள்ளை சந்தைக்கு மரக்கறி கொள்வனவிற்காக சென்ற நிலையில் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

(பாறுக் ஷிஹான்)

Thu, 11/26/2020 - 11:36

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை