ஆபிரிக்காவில் கொரோனா 2 மில்லியன்களை தொட்டது

 

ஆபிரிக்க பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் 2 மில்லியனைத் தொட்டிருப்பதோடு அங்கு இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பில், 54 நாடுகளைக் கொண்ட இந்த பிராந்தியத்தில் 48,00க்கும் அதிகமான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆபிரிக்க பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த தளர்வுகள் கொண்டு வரப்பட்டிருப்பதோடு மக்கள் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களிடையே முகக் கவசம் அணியும் அளவு குறைந்திருப்பது குறித்து ஆபிரிக்க நோய்த் தடுப்பு மையம் கவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்து குறித்து நம்பிக்கைகள் அதிகரித்தபோதும் செல்வந்த நாடுகள் அந்தத் தடுப்பு மருந்துகளை வாங்குவதால் ஆபிரிக்கப் பிராந்தியம் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

 

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை