கொவிட்-19: ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி சாதகமான முடிவு

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட தடுப்புமருந்து நோய்ப் பரவலை தடுப்பதில் பெருமளவு சாதகமான முடிவு கிட்டி இருப்பதாக பரந்த அளவில் மேற்கொள்ள சோதனைகளில் உறுதியாகியுள்ளது.

ஒட்டுமொத்த முடிவுகளில் இந்தத் தடுப்பு மருந்து 70 வீதம் பாதுகாப்புத் தருவதாகவும் அந்த எண்ணிக்கை 90 வீதம் உச்சத்தைப் பெற்றிருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பைசர் மற்றும் மொடர்னா தடுப்பு மருந்துகள் 95 வீதம் பாதுகாப்புத் தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் ஏனைய மருந்துகளுடன் ஒப்பிடுகையில் ஒக்ஸ்போர்ட் மேம்படுத்தி வரும் தடுப்பு மருந்து மலிவானதும் உலகின் எல்லா பக்கங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு முடியுமாக இலகுவாக களஞ்சியப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

100 மில்லியன் டோஸ் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை இங்கிலாந்து அரசு முன்பதிவு செய்துள்ளது, இது 50 மில்லியன் மக்களுக்கு நோயெதிர்ப்பு அளிக்க போதுமானவை ஆகும்.

சுகாதார மருத்துவ கட்டுப்பாட்டாளர்களினால் இந்தத் தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டால் கொவிட்–19 தொற்றை கையாள்வதில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்புச் செய்யும்.

Tue, 11/24/2020 - 10:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை