கொவிட் –19: ‘பைசர்’ மருந்தில் 90 வீதம் நோய் தடுப்பு ஆற்றல்

பைசர் மருந்தாக்க நிறுவனம், அதன் தடுப்பு மருந்து கொவிட் –19 நோயை 90 வீதம் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளது. பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த அந்தத் தடுப்பு மருந்தை அது சோதித்து வருகிறது.

அந்தத் தடுப்பு மருந்தை நெருக்கடி நேரத்தில் பயன்படுத்துவதற்கு அமெரிக்கக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியைக் கோரவும் திட்டமிடப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 44,000 பேரிடம் நடத்தப்படும் சோதனையில் 94 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்களைப் பற்றிய மேல் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்கு முன்பாகத் தடுப்பு மருந்து ஏதும் அங்கீகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் முதற்கட்டமாகக் குறைவான எண்ணிக்கையில்தான் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

 

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை