Header Ads

கொவிட்–19: மெக்சிகோவில் உயிரிழப்பு 100,00ஐ தொட்டது

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

அங்கே, வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் வீதம் 100,000 பேருக்கு 76 பேர் என்ற அளவில் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மெக்சிகோவில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் 100,000 பேர் வைரஸ் தொற்றுக்குப் பலியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், போதிய அளவில் மருத்துவச் சோதனைகள் நடத்தப்படவில்லை என்ற குறைகூறல் எழுந்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை உண்மையில் 150,000க்கும் அதிகம் என்று நம்பப்படுகிறது. 

எனினும் கொரோனா தொற்றினால் அதிக உயிரிழப்பு பதிவான நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரேசில் இந்தியாவுக்கு அடுத்து மெக்சிகோ நான்காவது இடத்தில் உள்ளது.

அதிக நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கையிலும் அந்த நாடு 11ஆவது இடத்தில் காணப்படுகிறது.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.