16,000 புதிய வீடுகள் நிர்மாணிப்பு 'சியபத நிவாச' வீடமைப்பு திட்டம்

பிரதமர் அடிக்கல் நாட்டல்

மரதகஹமுல 'சியபத நிவாச' வீடமைப்பு திட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

சகல குடும்பத்தினருக்கும் தங்களுக்கானதொரு இல்லம் என்ற எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடிக் குடியிருப்புகள் நிர்மாணிக்கப்படும்.

அதற்கமைய 160 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் வகையில் 16 ஆயிரம் வீடுகள் நாடு முழுவதும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

தற்போது ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் திவுலபிட்டிய தேர்தல் தொகுதியில் மரதகஹமுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன், இந்த குடியிருப்பு ஐந்து மாடிகளைக் கொண்டதாகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிட பொருள் தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகிறது.

வீடற்ற பெற்றோருக்கு வீடொன்றை பெற்றுக் கொடுக்கும் 'மிஹிந்து நிவாச' திட்ட முன்மொழிவிற்கு அமைவான திட்ட முன்மொழிவு மதிப்பிற்குரிய மஹா சங்கத்தினரினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய தேசிய லொத்தர் சபையினால் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு 75 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

லொத்தர் வரலாற்றில் 24 கோடி ரூபா என்ற பாரிய தொகையை பெற்ற வெற்றியாளருக்கான பரிசுத் தொகை இதன்போது பிரதமரினால் வழங்கப்பட்டது.

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை