1.6 மில். யூரோவுக்கு பந்தயப் புறா ஏலம்

சீன நாட்டவர் ஒருவர் பெண் புறா ஒன்றை உலக சாதனை தொகையான 1.6 மில்லியன் யூரோவுக்கு ஏலம் எடுத்துள்ளார். இணையதளத்தில் நடத்தப்பட்ட ஏலத்திலேயே அந்தப் புறா விலைபோயுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டில் ஆர்மென்டோ என்ற ஆண் புறா ஒன்று 1.25 மில்லியனுக்கு ஏலம்போனதே சாதனையாக இருந்தது.

நியு கிம் என்ற இரண்டு வயது கொண்ட இந்தப் பந்தயப் புறாவுக்கு 200 யூரோ விலையுடனேயே ஏலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது உலக சாதனை தொகை என்று குறிப்பிட்ட அந்த ஏல அமைப்பு இந்த புறாவை வாங்கியவர் இதனை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த எதிர்பார்த்திருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

விலைபோயிருக்கும் இந்தப் புறா பல புறாப் பந்தயங்களில் வெற்றி பெற்று பெயர்பெற்றதாகும். சீனாவில் அண்மைக் காலத்தில் புறாப் பந்தயங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில் இரு சீன நாட்டவர்களுக்கு இடையிலான கடும் போட்டிக்குப் பின்னரே இந்தப் புறா விலை போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை