கொரோனா நோயாளிகளின் தொகை 14,000ஐ கடந்தது

இதுவரை 6 இலட்சத்துக்கு மேல் PCR சோதனை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளை, மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியின் வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நேற்று 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந் நிலையில் நாட்டின் மொத்த வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் படி வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 14,285ஆகும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை நேற்றுக் காலை டோஹா கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நபர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதற்கிணங்க நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 8,880பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் மேலும் 5,609 பேர் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளிலும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்று முற்பகல் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 10,807ஆக அதிகரித்துள்ளது.

முப்படையினராலும் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் நேற்று வரை 63 ஆயிரத்து 921பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 2,409 பேர் 27 மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இதுவரை 6,02,850 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை