ஐ.அ. இராச்சியத்தில் 13 முஸ்லிம் நாடுகளுக்கான விசா நிறுத்தம்

ஐக்கிய அரபு இராச்சியம் 13 முஸ்லிம் பெருபான்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது

ஈரான். சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துருக்கி, சோமாலியா உள்ளிட்ட நாடுகள் அவற்றில் அடங்கும் என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 13 நாடுகளைச் சேர்ந்தவர்களின் வேலை, பயண விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் காரணங்களால் விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்கான காரணங்கள் மேற்கொண்டு விவரிக்கப்படவில்லை.

புதிய விதிமுறைகள் இம்மாதம் 18ஆம் திகதி அமுலுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அல்ஜீரியா, கென்யா, ஈராக், லெபனான், யெமன், லிபியா மற்றும் துனீசியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த விசா தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இராஜதந்திரிகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வாரத்திற்குப் பின் தடை அமுலுக்கு வந்துள்ளது.

புதிய விசாக்கள் வழங்கப்படாவிட்டாலும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் பாகிஸ்தானிலிருந்து சென்றுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு ரோய்ட்டர்ஸ் இடம் தெரிவித்தது.

Fri, 11/27/2020 - 11:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை