ருமேனிய மருத்துவமனையில் தீ: 10 கொரோனா நோயாளர்கள் பலி

ருமேனியாவில் பொது மருத்துவமனையில் மூண்ட தீயில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் கொரோனா நோயாளிகளாவர்.

பியாட்ரா நியாம்த் நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்ட அறையில் இருந்த எட்டு நோயாளர்களும் அடுத்த அறையில் இருந்து மேலும் இரு நோயாளர்களுமே உயிரிழந்துள்ளனர்.

நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற மருத்துவர் ஒருவர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்ற மருத்துவ ஊழியர்களும் அந்தத் தீச்சம்பவத்தில் காயமடைந்தனர்.

மின்கோளாற்றால் தீ மூண்டிருக்கக்கூடும் என்று ருமேனியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது. நோயாளிகளுக்காகக் கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த உயிர்வாயுவால் தீ வேகமாய்ப் பரவியதாக நம்பப்படுகிறது. 

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏனைய கொரோனா நோயாளர்கள் வேறு இடம் ஒன்று அனுப்பப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ருமேனியாவில் இதுவரை 350,000 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 8,813 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை