105 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று வரை 105 பொலிசாருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மாத்திரம் 10 பேர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினமும் புதிதாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் அதற்கிணங்க பாணந்துறை, அருக்கொடை, கித்துள்கல, இங்கிரியாவத்த சீபோன், கல்பாத்தரன்பமுனுகம, வெளிஹெலதென்ன ஆகிய பிரதேசங்களில் புதிதாக வைரஸ் தொட்டு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் அதில் ஏழு பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் தெமட்டகொடையிலுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தங்கியுள்ள கொழும்பு மலலசேகர மாவத்தையிலுள்ள பெண் பொலீஸ் உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதியில் 235 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க கொழும்பு குற்றத்தடுப்பு பொலீஸ் பிரிவில் இதுவரை 26 பேர் வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளன ர்.

அத்துடன் மோதரை பொலிஸ் நிலையத்தில் இருவரும் தெமட்டகொடை போலீஸ் நிலையத்தில் இருவரும் கொழும்பு துறைமுகம்,மாளிகாவத்தை,மருதானை, மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் தலா ஒருவர் என்ற ரீதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி யுள்ளதாகவும் அமைச்சுதெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் மருத்துவர் இருவருக்கும் தாதி ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி ஆஸ்பத்திரியில் சிறுவர் சிகிச்சை பிரிவில் அவர்கள் பணிபுரிகின்றனர். அந்த வார்டில் சிகிச்சை பெற்றுக் கொண்ட குழந்தைக்கும் அதன் தாய்க்கும் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை