நியூஸிலாந்தில் மணல்திட்டில் சிக்கி 100 திமிங்கிலங்கள் பலி

நியூஸிலாந்தில் கரையோர மணல்திட்டில் சிக்கிக்கொண்ட சுமார் 100 திமிங்கிலங்கள் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 97 பைலட் திமிங்கிலங்கள், 3 பெட்லெனோஸ் டொல்பின்கள் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.

நியூஸிலாந்தின் கிழக்குக் கரையில் உள்ள சாட்ஹாம் தீவில் இந்தச் சம்பவம் நடந்தது. பெரும்பாலான திமிங்கிலங்கள் கடந்த வாரயிறுதில் உயிரிழந்துள்ளன.

பெருநிலப் பரப்பிலிருந்து அந்தத் தீவு தொலைவில் இருப்பதால் மீட்புப் பணியாளர்கள் விரைந்து செயல்பட முடியவில்லை.

இன்னும் 26 திமிங்கிலங்கள் உயிருடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாட்ஹம் தீவில் திமிங்கிலங்கள் சிக்கிக்கொண்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு.

1918 இல் இந்தத் தீவில் இடம்பெற்ற திமிங்கிலங்கள் கரையில் நிர்க்கதியான ஒற்றைச் சம்பவத்தில் 1,000 திமிங்கிலங்கள் வரை உயிரிழந்தன.

அண்மையில் அவுஸ்திரேலியக் கரையோரத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் மணல்திட்டில் சிக்கி மாண்டன. 

இவ்வாறான சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது கடல்சார் உயிரியலாளர்களிடையே இன்றும் பெரும் புதிராகவே உள்ளது.

Fri, 11/27/2020 - 12:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை