கொரோனாவால் ஒரே நாளில் உலகில் 10,010 பேர் உயிரிழப்பு

கொவிட் – 19 நோய்த்தொற்றால் உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,010 பேர் உயிரிழந்துள்ளனர். அது முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சமாகும்.

பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, சோதனையில் 90 வீதம் நல்ல பலன் கொடுத்தாலும் அது முழுமையாகத் தயாராகி வருவதற்குச் சில காலம் எடுக்கும்.

அதுவரை மக்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உலக அளவில் நோய்ப்பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் லைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தடுமாறி வருகின்றன.

அமெரிக்காவில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அதிகமாக வெளியே வர ஆரம்பித்துள்ளனர். அதனால் வரும் நாட்களில் அங்கு பெரிய அளவில் நோய்ப்பரவல் ஏற்படலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை