100 ஆண்டுகளுக்கு முன் புறாவில் அனுப்பிய கடிதம் கண்டுபிடிப்பு

கிழக்கு பிரான்ஸில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பிரஷ்யன் இராணுவ வீரர் புறா மூலம் அனுப்பிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

காற்று வாங்கச் சென்ற ஒரு தம்பதி அந்தத் தகவல் இருந்த சிறிய பெட்டியைக் கண்டெடுத்தனர்.

ஜெர்மன் மொழியில் உள்ள அந்தச் செய்தியை முன்பு ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த இன்ஜெர்சிம் இராணுவப் படையைச் சேர்ந்த வீரர் எழுதியுள்ளார். இன்ஜெர்சிம் வட்டாரம் தற்போது பிரான்ஸில் உள்ளது.

இராணுவ உத்திகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன. தமது உயரதிகாரிக்காக இராணுவ வீரர் அதனை எழுதியதாக நம்பப்படுகிறது. 1915 இல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியப் படைகளுக்கு இடையிலான போரை கூறுவதாக அந்தக் கடிதம் உள்ளது.

1910 அல்லது 1916ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகத் தோன்றும் அந்தத் தாளும் தகவல் இருந்த பெட்டியும் லிஞ்ச் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை