கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முகம்மதியா அணி சம்பியன்

கிண்ணியா யங் மூன் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முகம்மதியா அணி வெற்றி பெற்று " யங் மூன்" வெற்றிக் கிண்ணத்தை " சுவிகரித்து 2020 ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

பத்து ஓவர் கொண்ட மென் பந்து போட்டியான இந்தச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா பிரதேசத்தில் இருந்து 32 அணிகள் பங்குபற்றின.

இந்தப் சுற்றின் இறுதி போட்டி நேற்று (12) கிண்ணியா றேஞ்சர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் கரன்ஸ் விளையாட்டுக் கழக அணியும் முகமதியா விளையாட்டுக் கழக அணியும் களம் இறங்கின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கரன்ஸ் அணி 10 ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய

முகமதியா அணி 9.3 ஓவர் முடிவில்

2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.

இறுதிப் போட்டியில் 54 ஓட்டங்களைப் பெற்ற முகம்மதியா அணியைச் சேர்ந்த முகம்மது சஜீத் சிறந்த ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சம்பியன் அணிக்கு கேடயத்தோடு 20 ஆயிரம் ரூபா பணப் பரிசும் இரண்டாவது அணிக்கு கேடயமும் 15 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

(கிண்ணியா மத்திய நிருபர்)

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை