ராஜஸ்தானை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபுதாபியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 20-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து, 194 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 18.1 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.

அணியில் அதிகபட்சமாக, ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களைக் குவிக்க ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை