ஹொங்கொங்கில் மூன்று ஜனநாயக ஆர்வலர் கைது

ஹொங்கொங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிவினைவாதத்தைத் தூண்டும் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் அவர்கள் வெளியிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களில் 19 வயது டோனி சுங்கும் ஒருவராவார். அவர் அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார்.

துணைத் தூதரகத்தில் புகலிடம் கேட்டுச் சென்ற ஆர்வலர்கள் நால்வர் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடுத்து ஹொங்கொங்கில் இருந்து புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹொங்கொங் அகதிகளுக்கு தாம் முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை