Header Ads

எயிட்ஸ் நோயில் இருந்து குணமடைந்த முதலாமவர் புற்றுநோயால் காலமானார்

உலகில் எயிட்ஸ் நோயில் இருந்து முதல் முறை குணமடைந்த திமித்தி ரே பரவுன் தனது 54 ஆவது வயதில் புற்றுநோயால் காலாமானார்.

2007ஆம் ஆண்டில் பெர்லினில் மேற்கொள்ளப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் அவர் எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்தார். அவருக்கு ‘பெர்லின் நோயாளி’ என்ற புனைப்பெயர் அதிலிருந்து வந்தது.

அதன் பின்னர் பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவருக்கு எயிட்ஸ் நோய் வரவில்லை.

கடந்த ஆண்டு அவருக்கு இரத்தப் புற்றுநோய் உண்டானது. நோய் அவரது முதுகுத் தண்டிலிருந்து மூளைக்குப் பரவியது.

அண்மையில் அவர் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்க்ஸ் நகரில் அந்திம பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தார் என்று அவருடைய மருத்துவர்கள் கூறினர்.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.