பாப்பரசர் முதல் முறையாக முகக்கவசத்துடன் பங்கேற்பு

பாப்பரசர் பொது நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறையாக முகக்கவசத்துடன் கலந்துகொண்டுள்ளார்.

வெள்ளை முகக்கவசம் அணிந்தவாறு, பாப்பரசர் பிரான்சிஸ் உலக அமைதிக்காக நடைபெற்ற பிரார்த்தனையில் மற்ற சமயத் தலைவர்களுடன் பங்கேற்றார். இதற்கு முன்னர் வாரந்தோறும் மக்களைச் சந்திக்க வத்திக்கான் செல்லும்போது, காரில் மட்டுமே அவர் முகக்கவசம் அணிந்திருந்தார். பொதுக் கூட்டங்களின்போதும் வருகையாளர்கள் அருகில் செல்லும்போதும் முகக்கவசம் அணியாததால், பாப்பரசர் ஒருசில குறைகூறல்களுக்கு ஆளானார்.

83 வயதான அவர் மற்ற கிறிஸ்தவத் தலைவர்களுடன் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள சேன்ட்டா மரியா தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார்.

ரோம் நகரின் மற்ற சில இடங்களில் யூத, பெளத்த, சீக்கிய, இந்து, இஸ்லாமியச் சமயங்களைச் சேர்ந்த தலைவர்களும் உலக அமைதிக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே இத்தாலியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 10,850க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை