Header Ads

ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று

போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதி செய்திருக்கின்றது. 35 வயது நிரம்பிய ரொனால்டோவின் நோய் நிலைமை பற்றி மேலும் விபரித்த போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம், ரொனால்டோ தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்ததோடு அவரிடம் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

கடைசியாக நெஷனல் லீக் கால்பந்து தொடரில் பிரான்சுக்கு எதிராக ஆடிய ஜூவன்டஸ் கழக வீரரான ரொனால்டோ, கடந்த வாரம் ஸ்பெயின் கால்பந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நட்புரீதியான மோதலிலும் பங்கேற்றிருந்தார். கொவிட்-19 தொற்று உறுதியாகியிருப்பதன் காரணமாக தனது தாயக அணி நெஷனல் லீக் கால்பந்து தொடரில் ஸ்வீடன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை ரொனால்டோ இழக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஜூவன்டஸ் அணி தொடர் ஏ கால்பந்து தொடரில் Crotone அணிக்கு எதிராக விளையாடவிருக்கும் போட்டியிலும், சம்பியன்ஸ் லீக்கின் குழு நிலை மோதலான டைனமோ கியிவ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு ரொனால்டோவிற்கு இல்லாமல் போகின்றது.

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.