அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், மூன்று ரி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள மூன்று வகை கிரிக்கெட் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் அணியின் விபரத்தை பார்க்கலாம். மொத்தமாக 28 வீரர்கள் இந்த தொடர்களில் விளையாட பெயரிடப்பட்டுள்ளனர்.

போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில் கே.எல். ராகுல் இடம்பெற்றுள்ளார். 18 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ்வும் இணைந்துள்ளார். தற்போது காயமடைந்த ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும், கம்லேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு மேலதிக பந்து வீச்சாளர்களும் அடங்குவர்.

விராட் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணியில், மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா, ரிஷாப் பந்த், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. ஆர்.அஸ்வின், மொஹமட் சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியை பொறுத்தவரை காயத்துக்குள்ளாகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சர்துல் தாகூர் அணியில் இடம்பெற்றுள்ளார். இதுதவிர பிருத்வி ஷா மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும், ரோஹித் சர்மா அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்றால் ஒருநாள் அணியின் துணைத் தலைவராக கே.எல். ராகுல் செயற்படுவார்.

விராட் கோஹ்லி தலைமையிலான ஒருநாள் அணியில், ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிதிக் பாண்ட்யா, மாயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட் ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரி-20 அணியை பொறுத்தவரை நவ்தீப் சைனி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான ரி-20 அணியில், ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்ட்யா, சஞ்சு சம்சன், ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை