Header Ads

ஒரே ஒருவருக்காக பெரு சுற்றுலாத் தலம் திறப்பு

பெருவின் மச்சு பிச்சுவில் உள்ள இன்கா இடிபாடுகள் ஒரே ஒரு ஜப்பானியச் சுற்றுலாப் பயணிக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

உலக மரபுடைமைத் தலமான அதைக் காண ஜெஸ்ஸி டகயாமா என்ற அந்த ஜப்பானியர் சுமார் 7 மாதங்கள் காத்திருந்தார். ஒரு சிறப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் டகயாமாவிற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அந்நாட்டுக் கலாசார அமைச்சர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து டகயாமா கடந்த சனிக்கிழமை மச்சு பிச்சு மலை உச்சிக்குச் சென்று அங்கிருந்து தமது மகிழ்ச்சியை வீடியோ மூலம் பகிர்ந்துகொண்டார்.

“இந்தப் பயணம் உண்மையிலேயே ஆச்சர்யமாக உள்ளது, நன்றி” என அவர் குறிப்பிட்டார். அவர் மார்ச் மாதம் மச்சு பிச்சுவை நேரில் காணத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான கட்டுப்பாடுகளால் மச்சு பிச்சுவிற்கு அருகில் உள்ள ஓர் ஊரில் அவர் சிக்கிக்கொண்டார்.

எத்தனை மாதமானாலும், மச்சு பிச்சுவைப் பாராமல் நாடு திரும்புவதில்லை என்ற உறுதியோடு காத்திருந்து நினைத்ததைச் சாதித்துள்ளார்.

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.