Header Ads

மனித உரிமை கெளன்சிலில் இணைவதில் சவூதி தோல்வி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கெளன்சில் அங்கத்துவத்தை பெறும் சவூதி அரேபியாவின் முயற்சி தோல்வி அடைந்ததோடு சீனா மற்றும் ரஷ்யா மூன்று ஆண்டு தவணைக்கு அதன் அங்கத்துவத்தை பெற்றுள்ளன.

இதில் அங்கத்துவத்தை பெறுவதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சீனா 139 வாக்குகளை வென்றது. ரஷ்யா மற்றும் கியூபா உட்பட 11 நாடுகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன.

பாகிஸ்தான், உஸ்பகிஸ்தான் தலா 169 வாக்குகளுடனும் நேபாளம் 150 வாக்குகளுடனும் அங்கத்துவத்தை பெற்றன.

சவூதி அரேபியா மாத்திரமே இந்த வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்த நாடாகும். அந்த நாடு 90 வாக்குகளை மாத்திரமே பெற்றது.

“அரசியல் கைதிகளை விடுவித்து, யெமனில் கொடிய போரை முடிவுக்குக் கொண்டுவந்து அனைத்து பிரஜைகளுக்கும் அர்த்தபூர்வமான அரசியல் பங்களிப்புக்கு அனுமதி அளித்து அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொள்ளாத வரை சவூதி அரேபியா சர்வதேச அளவில் தொடர்ந்து ஒதுக்கப்படும்” என்று அரபு உலகத்திற்கான ஜனநாக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சாரா லீஹ் வைட்சன் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.