அமெரிக்க குற்றச்சாட்டை ஈரான் நிராகரிப்பு

அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் நிராகரித்துள்ளது.

ரஷ்யாவும், ஈரானும் வாக்காளர் பதிவுத் தரவுகளைப் பெற்றுள்ளதாக அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை கூறியது.

பொய்த் தகவல்களைப் பரப்பவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கத் தேசியப் புலனாய்வுத்துறை இயக்குநர் ஜோன் ரேட்க்ளிப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாக்கெடுப்பிலும் அதன் முடிவிலும் தலையிட ஈரானுக்கு எந்த விருப்பமும் இல்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான ஈரானியப் பேச்சாளர் தெரிவித்தார்.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை