நன்கு சமைத்த மீனில் வைரஸ் தாக்கம் இல்லை

விசேட மருத்துவ நிபுணர் எஸ். ஸ்ரீதரன்

மீன்களை உணவுக்காக எடுப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றும் என பரப்பப்படும் தகவல்களில் எந்தவித விஞ்ஞான ரீதியான உண்மையும் கிடையாது. நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மீன் உபயோகம் மற்றும் மீன் வர்த்தகம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் எஸ். ஸ்ரீதரன் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கிணங்க மீன்களை உணவுக்காக உபயோகிப்பது தொடர்பில் வெளிவரும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பல்வேறு வகையிலும் தொற்றக் கூடும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மீன்களை பாவனைக்கு பெற்றுக்கொள்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளின் போது முகங்களில் கைகளை வைக்காமல் இருத்தல் மற்றும் அதற்காக உபயோகிக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் கைகளையும் நன்றாக சவர்க்காரம் பூசி கழுவு மாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை எந்த அடிப்படையும் இன்றி மீன் வர்த்தக நிலையங்களை மூட வேண்டிய அவசியம் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர், சமூக இடைவெளியை பேணுதல், கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை