Header Ads

வடகொரியாவில் இரவில் இராணுவ அணிவகுப்பு

வட கொரியாவில் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு தொழிலாளர் கட்சியின் 75 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னர் காணாத நீண்ட தூரம் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோர் இடையே நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பின்னர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா தனது இராணுவ அணிவகுப்பில் பயன்படுத்தவில்லை.

வட கொரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெறும் முதல் இராணுவ அணிவகுப்பாக இது உள்ளது.

சூரியோதயத்திற்கு முன்னர் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டிருப்பதாக தென் கொரிய இராணுவம் குறிப்பிட்டபோதும் அதற்கான காரணம் கூறப்படவில்லை.

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக உள்ளது.

இந்த இராணுவ அணிவகுப்பின் முடிவில் உரையாற்றிய கிம் வட கொரியாவில் யாருக்கும் வைரஸ் தொற்று உண்டாகாமல் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.