Header Ads

ரயில்பாதை ஓரங்களில் வதிபவர்களுக்கு வீடுகள்

அரசாங்கம் அறிவிப்பு

இந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று வவுனியாவில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது...படம்: ஓமந்தை விஷேட சதீஷன்

(முழுமையான செய்தி 17 ஆம் பக்கம்)

ரயில் பாதைகளின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் பாதையின் இரு மருங்கிலுமுள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மருதானை தொடக்கம் பாதுக்க வரை

வசிக்கும் ஆயிரத்து 630 குடும்பங்களை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நெரிசல்மிகு ரயில் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பாலித சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, களனி ஆற்றின் இருபுறமும் சுமார் 4,000 தொழிற் சாலைகள் அனுமதி பெறாமல் இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட அமைச்சின் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின்போது இந்த உண்மைகள் வெளிவந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.