கொரோனா தொற்று அச்சம்; நீர்கொழும்பு கடைத்தொகுதி பூட்டு

சுயதனிமைப்படுத்தலுக்கு பணிப்பு

கொரோனா வைரஸ் தொற்றையடுத்து நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கட் கடை தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு கடைகளில் வேலை செய்பவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இங்கு வந்த நீர்கொழும்பு பொது சுகாதார பரிசோதகர்கள் அங்குள்ள சகல கடைகளையும் மூடுமாறு பணித்துள்ளனர்.இக்கடை தொகுதியிலுள்ள ஒரு துனிக்கடை உரிமையாளருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.இதனாலேயே சுப்பர் மார்கட்டில் உள்ள சகல கடைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளனர். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த கடை உரிமையாளரின் மகனின் திருமண வைபவம் கடந்த 3ம் திகதி திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன.

இத்திருமண வைபவத்திற்கு இச் சுப்பர் மார்க்கட்டிலிருந்தும் சிலர் கலந்து கொண்டுள்ளனர். கடை உரிமையாளருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுப்பர் மார்கட்டில் வேலை செய்பவர்களிடையே பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். (சில்மியா யூசுப்)

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை