டிரம்பின் மரணத்தை வேண்டிய பதிவுகளை நீக்கியது ட்விட்டர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று கூறும் பதிவுகளை ட்விட்டர் நீக்கியதை அடுத்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த விதிமுறையை ட்விட்டர் அனைவருக்கும் பின்பற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். கொவிட்–19 நோய்த்தொற்றால் டிரம்ப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து, புண்படுத்தக்கூடிய பதிவுகள் குறித்து ட்விட்டர் கருத்துரைத்தது.

ஒருவர் மரணமடைய வேண்டும் என்றோ, கடுமையாகக் காயமடைய வேண்டும் என்றோ, மரணம் விளைவிக்கக்கூடிய நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்றோ பதிவிடுவது தனது கொள்கைகளுக்குப் புறம்பானது என்பதால் அத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டும் என்று ட்விட்டர் தெரிவித்தது.

யாருக்கு எதிராகவும் அத்தகைய கருத்துகள் தெரிவிப்பதற்கு ட்விட்டரில் அனுமதி இல்லை என்று அது குறிப்பிட்டது.

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை