Header Ads

கருணைக்கொலைக்கு நியூசிலாந்தில் ஆதரவு

நியூசிலாந்தில் கருணைக்கொலையை சட்டமாக்குவதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன்படி வாழ்வை முடித்துக் கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக 65.2 வீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டத்தின்படி ஆறு மாதங்களுக்கு குறைவான காலமே உயிர்வாழ வாய்ப்பு இருக்கின்ற நோய்வாய்ப்பட்டவர்கள் இரு மருத்துவர்களின் ஒப்புதலோடு மருத்துவர் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் இந்த சட்டத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று அதனை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான முடிவுகள் நேற்று வெளியானபோதும் இதன் உத்தியோகபூர்வ முடிவு வரும் நவம்பர் 6 ஆம் திகதியே வெளியாகவுள்ளது.

இது வரும் 2021 நவம்பர் மாதமே சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நெதர்லாந்து, கனடா உட்பட ஒருசில நாடுகளின் வரிசையிலேயே கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் நாடாக நியூசிலாந்து மாறவுள்ளது.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.