தாய்வான்–சீன அதிகாரிகள் பீஜியில் நேரடியாக சண்டை

நீண்ட காலமாக பதற்றம் நீடித்து வரும் தாய்வான் மற்றும் சீன இராஜதந்திரிகள் பீஜியில் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக சண்டியிட்டுள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் தமது தேசிய தினக் கொண்டாட்டத்தில் இரு சீன தூதரக அதிகாரிகள் நுழைவாயிலில் சண்டைபிடித்ததாக தாய்வான் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த சண்டையில் தமது அதிகாரிகள் காயமடைந்ததாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன. பீஜி பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தாய்வான் தமது பிரிந்து சென்ற மாகாணம் என்று சீனா கூறும் நிலையில் தாம் இறைமை கொண்ட ஒரு நாடு என்று தாய்வான் வலியுறுத்துகிறது.

பீஜியில் இருக்கும் தாய்வானின் வர்த்தக அலுவகலகத்தில் கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவம் பற்றி சீனா மாறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளது. குறித்த நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வெளியில் பொதுவான பகுதியிலேயே தமது அதிகாரிகள் இருந்ததாகவும் தாய்வான் அதிகாரிகளே மோதலை தூண்டும் வகையில் செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை