Header Ads

பாராளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு (29) பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 05 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மாஅதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு இந்த பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவரென இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் இந்த பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பர்.

அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது பாராளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.